நீர் நிலைகள்

Home  /  நீர் நிலைகள்

குளங்கள்

நீர்நிலைகளைப் பொறுத்தவரை இக்கிராமத்தின் சிறப்பு
ஆலம்பள்ளம் கிராமம் தன் எல்லையை சுற்றிலும் உள்ள மொத்த பரப்பலவில் 16 விழுக்காடு (16%) நீர்நிலைகளை கொண்டது.
ஒரு மன்னன் தனது அரண்மனையை சுற்றிலும் அகழி அமைத்து ஆளுமை செலுத்துவது போல் ஆலம்பள்ளம் கிராமம் தன் எல்லையை சுற்றிலும் சுமார் 100 முதல் 500 மீட்டர் இடைவெளியில் பல நீர்நிலைகளை அகழிகளாக கொண்டிருந்திருக்கிறது, இவற்றில் பல விவசாய பரிணாமத்தின் காரணமாக தேய்ந்து காணாமல் போய்விட்டாலும், இன்னும் சில மிளிர்ந்து கொண்டுதான் இருக்கின்றன வரலாற்றுச் சின்னங்களாய் இவற்றை நோக்கும்பொழுது இந்த கிராமத்தின் வரலாறு பற்றிய ஆர்வம் ஊற்றுக்கண்ணாகிறது.

தேவனி(தேவனேரி)

தேவனி என்றழைக்கப்படும் இந்த குளத்திற்கு வரலாற்று சிறப்பும் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆலம்பள்ளம் கிராமத்தில் அதிக பிராமணர்கள் வாழ்ந்ததாக வரலாற்று கூற்று. அச்சமயம் பிராமணர்கள் தேவனேரியின் நீரை இறை வழிபாட்டுக்கும் தங்களது சொந்த பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தியதால் இக்குளத்திற்கு தேவனேரி என்று பெயரிட்டுள்ளனர். தேவனேரி என்ற பெயர் மருவி தற்பொழுது தேவனி என்றழைக்கப்படுகிறது.
இது தற்பொழுது விவசாய நீர் பாசனத்திற்கும் கிராம மக்கள் நீராடுவதர்க்கும் பயன்படுத்தப்படுகிறது. குலத்தைச் சுற்றிலும் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு, அதன் முலம் வரும் வருவாய் கிராம நிர்வாக வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
குளத்தின் பரப்பளவு: 14.71 ஏக்கர்

பிள்ளையார் குளம்

பல ஆண்டுகளுக்கு முன் பிள்ளையார் இந்த குளக் கரையில் அமைந்திருந்ததால் பிள்ளையார் குளம் என்றழைக்கப்படுகிறது. கோவில் திருவிழாவின் பொழுது பக்தர்கள், தெய்வம் வீற்றிருந்த இந்த குளத்தில் நீராடிவிட்டு காவடி எடுத்துப் புறப்படுவது வழக்கம். தற்பொழுது இது விவசாய நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
குளத்தின் பரப்பளவு: 13.45 ஏக்கர்

செட்டியார் குளம்

கடல் சேரும் காவிரி நீரின் ஒரு பகுதி வாய்க்கால் மூலமாக அனுப்பப்பட்டு இதில் சேகரிக்கப்படும். இதன் பெருமளவு தண்ணீர் விவசாய சாகுபடிக்குப் உபயோகப்படுத்தப்படுகிறது. இது கிராம நிர்வாகத்தால் மீன் வளர்ப்புக்காக ஆண்டுதோறும் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டும்.
குளத்தின் பரப்பளவு: 23.70 ஏக்கர்

ஈழாங்குளம்/ இளவங்குளம்

கடவுளிடம் சேர்ந்த மக்களுக்கு கடைசி ஆத்மா இங்கிருந்துதான் எடுக்கப்படுகிறது. இது, அதனுடைய கீழ்புறம் உள்ள வயல்வெளிகளுக்கு நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
குளத்தின் பரப்பளவு: 5.37 ஏக்கர்

வீரமனியன்

இது, அதனுடைய கீழ்புறம் உள்ள வயல்வெளிகளுக்கு நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
குளத்தின் பரப்பளவு: 7 ஏக்கர்

பனைங்காடி

இது, அதனுடைய கீழ்புறம் உள்ள வயல்வெளிகளுக்கு நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
குளத்தின் பரப்பளவு: 3.53 ஏக்கர்

புது ஏரி

இது, அதனுடைய கீழ்புறம் உள்ள வயல்வெளிகளுக்கு நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
குளத்தின் பரப்பளவு: 21.11 ஏக்கர்

இது தவிர அன்னிவத்தி ஆகிய குளங்களும், சுமார் பத்துக்கும் மேற்பட்ட குட்டைகள் கிராமத்தின் உள்ளேயும் எல்லைப் பகுதியிலும் அமையப் பெற்றுள்ளன.